Thursday 7 June 2018

இலக்கியம் தரும் ஆறுதல்

வாழ்வின் பல வெப்பமான தருணங்களில் நிழல் தரும் நன்மரமாக இருந்தது இலக்கியம்தான். இலக்கிய வாசிப்பின் ஊடாகத்தான் நான் துயரங்களின் அடர்த்தியையும் அவற்றிலிருந்து விடுபடும் ரகசியத்தையும் கற்றேன். பாரதியில் தொடங்கிய என் வாசிப்பு புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.பா.ரா, சி.சு.செல்லப்பா, பிஎஸ்.ராமையா, தி.ஜானகிராமன், சிதம்பரசுப்ரமணியன், எம்.வி.வெங்கட்ராம், ,நா.பார்த்தசாரதி என வளர்ந்த போது என் உலகம் மிகவும் மாறிப்போயிருந்தது. 80 களிலேயே ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையும் லாசராவையும் அசோகமித்திரனையும் , பிரபஞ்சனையும் கோவை ஞானியையும் ,அம்பையையும் பித்தனைப் போல் தேடிப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.





பின்னர் ஜெயமோகன் எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகிய 15 ஆண்டுகளும் ஒரு கானலைப் போல் தடயமின்றி சுவடுகள் இன்றி அழிந்துப் போயின.
எஸ்.ராமகிருஷ்ணனும் சாரு நிவேதிதாவும் எப்போதாவது மனுஷ்யப்புத்திரனும் எழுத்தால் மனத்தைத் தொட்டுச் சென்றனர். அவர்களுடனும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சில சொற்கள் பேசியிருக்கிறேன்.
அதன் பின்னர் சூர்யராஜன், மு.நந்தா, சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், பிரான்சிஸ் கிருபா, வா.மு.கோமு, ஷாராஜ், கௌரி ஷங்கர், போன்றோரின் படைப்புகள் மனதுக்குள் இலக்கிய ரீதியான எழுச்சியை ஏற்படுத்தின.தமிழ்மணவாளன், சொர்ணபாரதி, வே.எழிலரசு., அமிர்தம் சூர்யா. சௌந்தர சுகன்,  போன்ற நண்பர்களின் எழுத்துகளையும் அவர்களின் சொரூபமாக நேசிக்கப் பழகிக்கொண்டேன்.
இவ்வாறாக தொடர்ந்த இலக்கியப் பயணம் இன்று தேக்கத்தில் உள்ளது. படைப்பூக்கம் குறையாத போதும் எழுத்து அரிதாகிக் கொண்டிருக்கிறது. எழுதியவை பிரசுரமாகவில்லை. இந்நிலையை தகர்க்க வேண்டும் என பல நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த இணைய வெளியிலாவது ஆயிரக்கணக்கானோர் காண்பதற்காகவாவது எழுதிக் கொண்டிருக்க தோன்றுகிறது. முயற்சிக்கிறேன்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...