Wednesday 31 May 2023

தீப் பூக்களுடன் தலையாட்டும் மரம் கவிதை

தினம் ஒரு கவிதை 1 தீப் பூக்களுடன் தலையாட்டும் மரம் மரநிழல் தெரியாத தகிப்புகளூடாக நமது கரங்கள் கோர்த்தன. அங்கொரு மரம் தீப்பூக்களுடன் தலையாட்டுவதைக் கண்டேன். அதனடியில் போய் குளிருக்கு கனப்பு மூட்டிய இளமையைக் காய்த்தோம். பூத்தால் இப்படி பூக்க வேண்டும் சிவப்பு சிவப்பாக என்றது என் இடதுசாரி மனம் மணமே இல்லாமலா என்று சிரித்தாய் காலங்கள் கரைந்தாலும் இந்த மரத்தின் தீப் பூக்கள் உதிரவே இல்லை. நீ பிரிந்து சென்று விட்டாய் .அதன் பிறகுதான் அந்த மரம் சாய்ந்தது அந்த மரம் இப்போது என் நெஞ்சுக்குள் பூத்திருக்கிறது அக்னி கங்குகளுடன் சுட்ட வடுக்களுடன் அதற்கு மேலும் மேலும் நீரூற்றிக் கொண்டிருக்கிறேன் இதில் பறவைகள் அமர்வதில்லை பூச்சிகள் ரீங்கரிக்கவில்லை வெம்மையின் புண்களுடன் ஒரு பழைய நினைவைக் கோர்த்து வைக்கிறேன். எப்போதும் நெருப்புடன் வாழ்கிறேன். எப்போதும் தீயாகவே காய்கிறேன். நீ இருப்பாய் எங்கேயோ ஏதேனும் ஓர் மர நிழலில் வாசனைமிக்க மலர்களோடு. எப்போதாவது தீப்பூக்கள் நிரம்பிய மரத்தைப் பார்த்தாலாவது என்னை நினைத்துக் கொள்வாய். என்னை எரித்துச்சென்ற தீயையும் நீயல்லவா மூட்டினாய். எரிகிறேன். மெழுகுக்குத் தெரியும் எரிவது எத்தனை இன்பம் என்று.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...