Posts

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

Image
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை
உலகசினிமா
LIMELIGHT- காலவெளியில்சிறகடிக்கும்கலைஞன்
இயக்குனர்-சார்லிசாப்ளின்
-செந்தூரம்ஜெகதீஷ்
ஊமைப்படங்களின்நாயகன்சார்லிசாப்ளின். சொற்களால்உணர்வுகளைஆழமாகப்பிரதிபலிக்கமுடியாதுஎனபலகாலம்நம்பிக்கொண்டிருந்தவர்அவர். சொல்அலங்காரமானது, பொய்யானது, அடுத்தகணமேமாற்றிப்பேசக்கூடியது. ஆரவாரமானது. அதன்ஓசைகளும்உச்சரிப்புகளும்ஒருமனிதனுடையதரம்தாழ்த்தவோஉயர்த்தவோகூடியது. சொற்களால்அரசியல்வளர்ந்தது. சொற்களால்கலைதேய்ந்தது. சொற்களால்ஆன்மீகஅனுபங்கள்பொய்த்தன. சொற்களால்

ரசனை சினிமா 2

ரசனை சினிமா

ரசனை சினிமா 11
அவர்கள் -1977
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ரவிக்குமார், சுஜாதா ,லீலாவதி மற்றும் ஜூனியர் பொம்மை
பாடல்கள் -கவியரசு கண்ணதாசன்
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் -கே.பாலசந்தர்
அனு , பரணி, ராமநாதன், ஜனார்தன், லீலாவதி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களுடன் ஒரு சுட்டியான பொம்மையும் இப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளது. காதலிக்கும் பரணியை விட்டு மும்பை செல்லும் அனு அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் விருப்பத்திற்கு இணங்கி பண உதவி செய்யும் ராமனாதனை மணக்கிறாள். பரணிக்கு அவள் போட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை.
ராமனாதன் ஒரு சாடிஸ்ட் .மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துகிறான். ஆனால் அழக்கூடாது என்ற உறுதி கொண்டிருக்கும் அனு அவனை விட்டுப் பிரிந்து கைக்குழந்தையுடன் மீண்டும் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அவளது அலுவலக சகாவான ஜனார்தன் ஒருதலையாய் அனுவை காதலிக்கிறான். ஆனால் காதலை சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. மீண்டும் பழைய காதலன் பரணியை சந்தித்து கடிதங்களுக்கு பதில் வராத காரணத்தை தெரிந்து மீண்டும் அவனுடன் பழகுகிறாள் அனு. ஆனால் ராமநாதன் திருந்தியவனாக அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். கண…

ரசனை சினிமா 1

ரசனை சினிமா என்ற பெயரில் பேஸ்புக்கில் நான் எழுதும் தொடர்

1சினிமா - மீனவ நண்பன் -(1977)
எம்.ஜி.ஆர். லதா ,வெ.ஆ.நிர்மலா, நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ,சச்சு
பாடல்கள் வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம்
இசை எம்.எஸ்..விஸ்வநாதன்
இயக்கம் ஸ்ரீதர்
எம்ஜி ஆரின் வயதான தோற்றத்திலும் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து லதா வாணி ஜெயராமின் இனிமையான குரலில் பாடும் போது நம்பத்தான் தோன்றுகிறது. வழக்கமான எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடனங்களும் சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் சற்று குறைவுதான். மீனவர் வாழ்வை சித்தரித்த படகோட்டி அளவுக்கு கூட கதையம்சமும் இல்லை .ஆனாலும் இப்படத்தை தொடர்ந்து இரண்டரை மணி நேரம் பார்த்தேன். காரணம் எம்ஜிஆர் மட்டுமல்ல பாடல்களை தந்த இசையமைப்பாளரும கவிஞர்களும்தான்
புலவர் புலமைப்பித்தன் எழுதி நேருக்குநேராய் வரட்டும் என்ற முதல் பாடலில் தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளுடன் எம்ஜிஆரின் கொள்கையை பொருத்திய விதம் அழகு....
வாலி எழுதிய பட்டத்து ராஜாவும் பாடலில்
கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட கூட்டங்கள் என்னானது. பல ஓட்…

ரசனை புத்தகம் 2

ரசனை என்ற பெயரில் பேஸ்புக்கில் நான் எழுதும் தொடரின் இரண்டாம் பாகம்

கு. அ.தமிழ் மொழியின் ஹைகூ கவிதைகள்
சிறகின் கீழ் வானம்
புதுச்சேரி தந்த பெண் கவிகளில் ஒருவர் கு.அ.தமிழ்மொழி .தமிழில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் முக்கியப் படைப்பாளி. இத்தொகுப்பு அவருடைய பதின் பருவத்தில் வெளியானதாக இருக்கலாம் என்பதை பின் அட்டையி்ல் உள்ள  புகைப்படம் விளக்குகிறது. தச்சன் இதழுக்கு அவர் அளி்த்த பேட்டி, அவருடைய புகைப்படங்கள், பரிசுகள், விருதுகள் பட்டியல், முன்னுரைகள், அணிந்துரைகள் என இத்தொகுப்பு ஒரு களஞ்சியமாக விளங்குகிறது.
சரி கவிதைகள்....?
ஹைகூ வடிவம் எழுத சுலபமானது. ஆனால் அதை கவிதையாக்குவதுதான் கடிதனமானது. தெறிப்புகள் போல் சிந்தையில் உதிப்பதையெல்லாம் பதிவு செய்வதல்ல கவிதை. பாஷோவும் பூஷணும் ஷிகியும் ஜப்பானில் ஹைகூ எழுதிய போது இயற்கையை பாடுவதை ஒரு நிபந்தனையாக ஏற்றார்கள். நீண்ட மோனத்தில் தவமிருக்கும் ஓணான், சிறகிசைக்கும் பட்டாம்பூச்சிகள், அரிசி இல்லாத தட்டில் பிரதிபலித்த நிலவின் காட்சி, வெட்டுக்கிளியின் பாடல் , தானாக வளரும் புற்கள், குளத்தில் குதிக்கும் தவளை என அவர்கள் கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கினார்கள…

சந்திப்பு -கவிஞர் எஸ்.அறிவுமணி

Image
கவிஞர் எஸ்.அறிவுமணியுடன் சந்திப்பு

திருச்சியில் வசிக்கும் எங்கள் அண்ணன் கவிதைக்காரன் அறிவுமணியை அவர் வீட்டில் சந்தித்தேன் .வாழ்க்கையுடன் கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டும் மிகுந்த அன்புடன் வரவேற்று பேசினார். நல்ல மனம் மிக்க மனிதர் அவர். அவருடைய கவிதை வரிகளில் ஒன்று சோற்றுக்கூடையை பசியோடு சுமப்பவர்கள்... இதனை பெரியார்தாசன் தமது கூடட்ங்கள் அனைத்திலும் மேற்கோள் காட்டுவார்.
அறிவுமணி சென்னை புரசைவாக்கத்தில் இருந்தார். பணி நிமித்தமாக திருச்சிக்கு மாறினார். 300 மைல் தூரம் வந்துட்டதால் நான் செத்துப் போனதாக கூட ஒரு பெண் கவிஞர் யாரிடமோ பேசினார் என வருத்தப்பட்டார். அவருக்கு போன் போட்டு ஹலோ நான் அறிவுமணி ஆவி பேசுகிறேன். இன்று இரவு உங்களை தாக்க காலன் வரப்போகிறான் என்று சொல்லுங்கள் மணி இதற்காக போய் வருந்தலாமா...என்றேன்.
வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் .கவிதைகளுக்காக சிறுபத்திரிகை நடத்த வேண்டும். கவிஞர்களுடன் பேச வேண்டும் ,எப்போதும் கவிஞனாக மட்டுமே அறியப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுமணியின் கனவுகள் இன்று வரை நிறைவேறவில்லை. வயது 66 ஆகிவிட்டதாக கூறினார். முதுமை ,மரண பயம் குடும்பப் பிரச…

ரசனை -புத்தகம் 1

முகநூல் பகுதியில் senthooram என்ற எனது பக்கத்தில் புத்தகங்கள் பற்றியும் சினிமா பற்றியும் எழுதி வருகிறேன். இதில் புத்தகம் குறித்த கட்டுரைகள்
1-5 
ரசனை -புத்தகம்
செந்தூரம் ஜெகதீஷ் 

1 -ஸ்ரீலெஜா வின் கவிதை நூல்- கமுகம் பூ 
குழித்துறை ஸ்ரீதேவிகுமார் தாவரவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் திருமதி ஸ்ரீலெஜாவின் முதல் கவிதைத் தொகுப்பு இது...அவருடைய இயற்பெயர் தெரியவில்லை. 
முன்னுரை எழுதியுள்ள பொன்னீலன் அய்யா அவர்கள், ஸ்ரீலெஜாவின் கவிதைகளில் காமாட்சிப் பாட்டி நீலியோடு நட்புகொண்டுஉறங்குவதையும் ஆள் உயர கருநாகமும் நியாயத்திற்கு கட்டுப்பட்டுநிற்பதையும் சிலாகிக்கிறார்.
கவிதைகள் தென்தமிழகத்தின் கவிமொழியுடன் கலந்த பெண் மொழியுடன் படிக்க அழகாகஇருக்கின்றன. குமரி மாவட்டத்தின் ஓணம் பண்டிகை, 
அம்மியில் அரைத்த விழுதுடன் 
ஆற்று மீன் குழம்பு
உரலில் இடிக்கப்பட்ட சிகப்பரிசி பொடியுடன் 
தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்த
குழாய் புட்டு
போலத்தான் இருக்கின்றன இவரது கவிதைகள்..எளிய மனிதர்கள், பால்ய காலம் , இயற்கை மீதான காதல் என்று புறவயம் சார்ந்தே சிந்திக்கிறார். கவிதையின் ஒரு கிளை புறம் நோக்கி வானுயர விரிந்தாலும் இ…

புத்தக வாசிப்பு

புத்தக வாசிப்பு சிறுவயது முதலே பழகிக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபிள்ஸ் போன்றவை பாடத்திலேயே இடம் பெற்றிருந்தன. அது தவிர ராமாயணமும் மகாபாரதமும் தீராத காதலை ஏற்படுத்தின. வளர் பருவத்தில் நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் அறிமுகமாகி கவனத்தில் பதிந்தனர். பின்னர் புதுமைப்பித்தனும் பாரதியும் ஆட்டிப் படைத்தனர். தொடர்ந்து மணிக்கொடி எழுத்தாளர் வரிசை, தீபம், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த ஆதவன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என தீவிரம் அடைந்த வாசிப்பு ஆங்கில கல்வி தந்த பயிற்சியால் உலக இலக்கியங்களின் பக்கமும் திரும்பியது. மார்சல் பிரவுஸ்ட், மிச்சல் பூக்கோ, மரியோ வர்காஸ் லோசா, காப்ரியல் கார்சியா மார்க்யூஸ் , தஸ்தயவஸ்கி.காப்கா, ஹென்றி மில்லர் தல்ஸ்தோய் என பரந்து விரிந்த வாசிப்பு ஒரு கட்டத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமும் ஓஷோவிடமும் வந்து சிக்கிக் கொண்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்த போது கம்பர் கைகொடுத்தார். கம்பனின் தமிழ் என்னை வேறு எதையும் சிந்தி்க்க விடாமல் செய்தது. கம்பராமாயண கூட்டங்களில் பங்கேற்றேன். சில காலம் உடல் நோய், மன உளைச்சல், வாழ்வின் பரிதவிப்புகள் காரணமா…

அஞ்சலி -கவிஞர் மு.நந்தா

Image
கவிஞர் மு.நந்தா புதுவண்ணைப் பகுதியைச் சேர்ந்தவர். மரபும் மு.மேத்தாவின் பாதிப்பும் மிக்க கவிதைகளைப் படைப்பதில் ஆர்வம் கொண்டவர். நாளை வேறு சூரியன் என்ற அவர் கவிதைத் தொகுப்பில் எந்த ஊர் எந்த பஸ், காசி மேடு, போன்ற கவிதைகள் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. தலைக்கு எண்ணெய் இல்லாத சிறுமியின் சிகையில் உள்ள சிக்குகளில்தான் இந்திய பொருளாதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்த மகத்தான படைப்பாளி அவர். புத்தனின் கொள்கையில் என்ன குறை அவன் போதி மரத்திலா ரத்தக் கறை என சிங்களர்களிடம் கேள்வி எழுப்பியவர். எல்லாவற்றுக்கும் மேலாக 30 ஆண்டுக்கும் மேலாக .இனிய நண்பர்.

அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எழுதுவதிலும் அடங்காத ஆசை கொண்டிருந்தார். கை விரல் நடுங்க பேடில் வெள்ளைத் தாள்வைத்து எழுதிக் கொண்டிருந்தார். எப்போது சந்திக்கும் போதும் என் சட்டைப் பையில் இருக்கும் அழகான பேனாக்கள் மீது அவர் கவனம்செலுத்துவார்.நானும்விரும்பியே பல பேனாக்களை அவரிடம் தாரை வார்த்தேன். அவர் எழுத வேண்டும் என்று தீராத ஆவல் எனக்கிருந்தது. பல புத்தகங்களை எழுதிய நந்தா தமது முகவரியாலும்( வட சென்னை) சாதிரீதியான இழி பார்வைகளால…