கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா...வா வா...வா வா...வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆ...நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
தந்ததோ நூறு என்றால்
என் பங்கும் நூறு உண்டு

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆ...தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா