தூங்காவனம்

சிறுவயது முதலே கமல் ரசிகன் நான். எனது வயதில் உள்ளவர்கள் எம்ஜிஆரா சிவாஜியா எ்ன்ற கேள்வியை சந்தித்திருப்பார்கள். எம்ஜியாரும் சிவாஜியும் என்று வளர்ந்திருப்பார்கள். அதே போல் கமலா ரஜினியா என்ற கேள்வியையும் விஜய்யா அஜித்தா என்ற கேள்வியையும் சந்தித்திருக்கிறேன். என் சாய்ஸ் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, அஜித்.விஜய் என வரிசைப்படு்த்தலாம்.....
இப்போதுள்ள நடிகர்களில் கமலின் இடம் முதன்மையானது. வணிக ரீதியான ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் கமல் படங்கள் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுபவை.நடிப்பில் அவர் புதிதாக தொட வேண்டிய எல்லை எதுவும் இல்லை என்றாலும் ஒரு நெருங்கிய நண்பரை காண்கிற சந்தோஷம் திரையில் அவரை காணும் போது ஏற்படுவது இயல்பு
தூங்காவனம் படம் பார்க்க டிக்கட் எடுத்து ரத்தாகி தள்ளிப்போனது. திருட்டு சிடியில் இதுபோன்ற படங்களைப் பார்க்க விரும்பாததால் 25 நாள் கடந்த நிலையில் தியேட்டருக்கே போய் பார்க்க முடிவு செய்தேன். சத்யம் திரையரங்கில் 7 மணி கா்ட்சி டிக்கட் எளிதாக கிடைத்தது.
மகனை கடத்திச் செல்லும் போதைப் பொருள் கும்பலுடன் கமல் மகனை மீட்க நடத்தும் போராட்டம்தான் கதை அப்பட்டமான ஆங்கில வாடை .பிரபலமான ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்த தகவல் தெரிந்ததுதான் என்றாலும் ஆங்கிலப் பட நாயகர்களைப் போல் டைவர்ஸ் ஆன மனைவி முத்தம் கொடுக்க வரும் திடீர் காதலிகள் என அதே பாணியில் கதை நகர்கிறது. ஆறுதல் தருவது திரிஷாவின் பாத்திரம். அபாரமான தோற்றத்தில் வயதின் அடையாளங்களை மறந்து திரிஷா துள்ளியிருக்கிறார்.
மகனாக வரும் சிறுவனின் அப்பாவித்தனமான முகம் மனத்தில் நிற்கிறது.
பிரகாஷ்ராஜ் எக்கச்சக்கமாக கூத்தடித்து படத்தின் முடிவில் பட்டென ஒரு துப்பாக்கிக்குண்டு பாய்ந்து செத்துப் போகிறார். அழகான ஆஷா சரத்தை மறுபடியும் எப்போது பார்ப்போம் என காத்திருக்க நேர்கிறது. வந்து போகிறார்.மதுஷாலினி காதலனால் பலாத்காரத்திற்கு ஆளாகி கமலால் காப்பாற்றப்பட்டு அவருடன் மூன்று  முறை உதட்டுடன் உதடு பதித்து முத்தங்களைப் பெறுகிறார்.

கமல் படம் முழுவதும் தனது ஆளுமையால் சாதிக்கிறார் .ஆனால் திரைக்கதையில் பல ஓட்டைகள். வில்லன் பிடியில் மகனை கமல் பார்ப்பதை படத்தின் தொடக்கத்திலேயே காட்டி விட்டு கிளைமேக்ஸ் வரை மீட்கப் போராடுவது ஹூரோயிசத்திற்கே பேரிழுக்கு.
இசை ஜிப்ரான். படத்தின் இறுதியில் கமல் குரலில் வைரமுத்துவின் பாட்டு ஒன்று வருகிறது. ஆனால் பார்க்க யாருக்கும் பொறுமை இல்லை. பின்னணி இசை படத்தை காப்பாற்றுகிறது.
தூங்கா நகரம் படம் உத்தமவில்லனை விட நல்ல படம் அல்ல .ஆனால் கமல் என்ற கலைஞனை வர்த்தக சினிமாவிலிருந்து தூக்கியெறியப்படாமல் அவரை காப்பாற்றக் கூடிய படம். என்பதற்காக பார்க்கலாம்.
Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்