Thursday 3 December 2015

வேதாளம்

வேதாளம் படத்தை பார்க்கவே கூடாது என்ற கடுப்பில் இருந்தேன். காரணம் தீபாவளி அன்று அப்படம் ரீலீசான போது உட்லண்ட்ஸ் திரையரங்கில் சாலையை மறித்து அஜித் ரசிகர்கள் போட்ட ஆட்டமும் செய்த அட்டகாசமும்தான். ரவுடிகள், சமூக விரோதிகள், விளிம்புநிலை இளைஞர்களி்ன் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடும் அஜித்தின் ஹீரோயிசம் அண்மைக்கால படங்களில் அருவருப்பை ஏற்படுத்தி வருகிறது. எனக்கு இன்னமும் காதல் கோட்டையில் வரும் அந்த அன்பான அஜித்தை தான் பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ஆலுமா டோலுமா என்றொரு கண்றாவி பாட்டு கழிசடை, சோமாரி பேமாரி போன்ற மட்டமான வார்த்தைகள் எல்லாம் இருந்ததும் படத்தை பார்க்க விடாமல் தள்ளி்ப்போட செய்தன
ஆனால் மழைக்காக வேண்டி சத்யம் திரையரங்கில் சல்மான்கான் படம் பார்க்கப் போய் காட்சி இல்லை என்று வேறு வழியின்றி வேதாளம் படத்தை அரைமனத்துடன் வாங்கினேன்.
படம் ஆரம்பம் முதலே அதிரடி. அப்பாவி லுக் வில்லத்தனம் என்று அஜித் அட்டகாசம் செய்கிறார். சில நேரம் அவர் அழகும் நிறமும் வடநாட்டு முகமும் சிரிப்பும் பாத்திரத்திற்கு பொருந்தாமல் போனாலும் நடிப்பாலும் தனது அதிரடி ஆக்சன் காட்சிகளாலும் மனதில் இடம்பிடிக்கிறார். அதை விட அதிகமாக அண்ணன் தங்கை பாசத்தை அபாரமாக வெளியிடுகிறார்.

லட்சுமி மேனன் தள தள என வளர்த்தியுடன் செம்மையாக இருக்கிறார். தங்கையாக நினைக்க முடியாத உடல்வாகு. விரைவில் டூபீஸ் உடையில் பார்க்க விருப்பம்.ஆனால் இந்தப் பொண்ணு கண்ணாலும் உடல்மொழியாலும் நடித்திருக்குதே ....அடடா லட்சுமி மேனனுக்காகவே இந்தப் படத்தை பலமுறை பார்க்கலாம். இன்னொரு நடிகையர் திலகம்தான்

படத்தை மிகவும் ரசித்துதா்ன் பார்த்தேன். இப்படி ஒரு அதிரடி ஆக்சன் படத்தை பார்த்து எத்தனை நாளாகி விட்டது. நான் ஆக்சன் படங்களின் ரசிகன்தான், வாழ்வில் ஒருவரை கூட ஒரு அடி கூட அடித்ததில்லை , பல முறை அடிவாங்கியிருப்பேன். ஆனாலும்......





No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...