Thursday 5 November 2020

புன்னகையுடன் பேசுகிறேன்

எல்லா மனிதர்களையும் ஒரே நேரத்தில் நேசிக்கவும் வெறுக்கவும் என்னால் எப்படி முடிகிறது என்று வியக்கிறேன். சில மனிதர்கள் அப்படி ஒன்றும் மோசமானவர்கள் இல்லை. மாறாக மிகவும் நல்லவர்கள். அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களிடமும் நான் ஏன் விலகிச் செல்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நான் என்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று கூட சொல்ல முடியவில்லை. ஏனெனில் நான் மிகவும் வெறுக்கிற மனிதனும் நானேதான்.உறவுகள்,நட்புகள்,காதல்கள் தந்த வலிகள் இன்னும் நெஞ்சில் வண்டுகளைப் போல குடைகின்றன. எல்லோரும் சரியான வர்களாக இருக்கிறார்கள் எனில் நான் மட்டும் எப்படி தவறானவனாக இருக்கிறேன்.? நான் என்னதான் இந்த வாழ்க்கை யிடம் கேட்டு விட்டேன்?அன்பும் அரவணைப்பும் உண்மையும் அத்தனை தூரத்தில் உள்ள எட்டாத கனிகளா? யாரிடத்தில் எனக்கு அன்பும் அரவணைப்பும் உண்மையான தோழமையும் கிடைக்கும்?நான் அதனை எத்தனை பேருக்கு வழங்கியிருக்கிறேன்... அவர்களின் பெயர் சொல்லி கொச்சைப்படுத்த மாட்டேன்.இந்த வாழ்க்கையில் நான் வாழ இயலாது போனாலும் பிள்ளை களுடன் பூரணமாக வாழும் ஒவ்வொரு குடும்பத்தையும் மனதார வாழ்த்துகிறேன்.என் கண்ணீரின் ரகசியங்களை மகிழ்ச்சியுடன் வாழும் யாரிடமும் ஒருபோதும் கூற மாட்டேன். அவர்களிடம் ஒரு புன்னகையுடன் தான் பேசிக் கொண்டிருப்பேன்.என் சோகம் என்னோடுதான்.

1 comment:

  1. அருமையான பதிவு ஜெகதீஷ் சார் …… உங்களை போலவே நானும்… மற்றும் ஏராளமானோரும்…. எதையாவது எதிர்பார்த்து செயல்படும் இன்றைய உலகம்…. வர்த்தகத்திற்கு உபயோகமில்லை என்பவரை காலில் மிதித்த சாணியாய் பார்க்கிறது… சிராய்ப்புகளும்…. காயங்களும்… வலிகளுக்கும் மத்தியில்… ஜாக்கிரத்தையாக பார்த்துக்க வேண்டியது…. உங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் அந்த ரசனை குழந்தையை….

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...