Wednesday 20 April 2016

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

நான் வாசித்த புத்தகங்களில் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்யத்தக்க பத்து மிகச்சிறந்த தமிழ் நூல்களை இங்கு பட்டியலிடுகிறேன். தவறாமல் இவற்றை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த கம்பராமாயணம், திருவாசகம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம், திருவாசகம், தேவாரம், கந்தசஷ்டி கவசம், திருமந்திரம், திருக்குறள், சங்க இலக்கியம், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை இங்கு பட்டியலிடவில்லை. இவை படிக்காமல் எதுவும் இல்லை.
நவீன இலக்கியம் சார்ந்தே எனது பட்டியல்
தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பல ஆயிரமாயிரம் உண்டு. பத்து மட்டுமே தேர்வு செய்ய சொன்னால் எனது தேர்வு இதுதான்.

சிறுகதைகள்
1  மௌனி கதைகள்
2. புதுமைப்பித்தன் கதைகள்
3 கு.ப.ரா. கதைகள்
4. அசோகமித்திரன் சிறுகதைகள்
5. லாசரா சிறுகதைகள்
6. ஆதவன் சிறுகதைகள்
7. ஜெயகாந்தன் சிறுகதைகள்
8. நா.பார்த்தசாரதி சிறுகதைகள்
9. சி.சு.செல்லப்பா சிறுகதைகள்
10. பிரபஞ்சன் சிறு கதைகள்

- இவை தவிர ந.பிச்சமூர்த்தி கதைகள், பி.எஸ்.ராமையா, கநாசு, ;சுந்தர ராமசாமி, தஞ்சை ப்ரகாஷ். சுப்ரமண்ய ராஜூ ,கிருஷ்ணன் நம்பி,.திலீப்குமார், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சூர்யராஜன், ஷாராஜ், அம்பை ,தமயந்தி , ஆகியோரின் சிறுகதைகளும் எனக்குப் பிடிக்கும்.


நாவல்கள் 
ஒரே எழுத்தாளரின் பல நாவல்கள் பிடித்தவையாக உள்ள போதும், தலா ஒன்று வீதம் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

1.ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
2. இடைவெளி -சம்பத்
3. கரைந்த நிழல்கள் -அசோகமித்திரன்
4. பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்
5. பாரீசுக்குப் போ - ஜெயகாந்தன்
6. நெற்றிக்கண் -நா.பார்த்தசாரதி
7. மண்ணில் தெரியுது வானம் -ந.சிதம்பர சுப்பிரமணியம்
8. மோக முள் - தி.ஜானகிராமன்
9. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ- சுஜாதா
10. விஷ்ணுபுரம் -ஜெயமோகன்

இவை தவிர ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், ர.சு.நல்லபெருமாள், ப.சிங்காரம் , ந.சிதம்பரசுப்பிரமணியம். நாஞ்சில் நாடன், பூமணி, வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி,  பாலகுமாரன்  நாவல்களும் முக்கியமானவையே.எனது கிடங்குத் தெருவை விரும்பினால் நீங்கள் இதில் இணைத்துக் கொள்ளலாம்.

கட்டுரைகள்
1.தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது - சி.சு.செல்லப்பா
2. விரிவும் ஆழமும் தேடி.. .சுந்தர ராமசாமி
3 அனுமன் -வார்ப்பும் வளர்ப்பும் -மு.ஹரிகிருஷ்ணன்
4. வெங்கட்சாமிநாதன் கட்டுரைகள் அனைத்தும்
5. எனது பர்மா வழி பயணம் - வெ.சாமிநாத சர்மா
6 எனது கலையுலக அனுபவங்கள் - ஜெயகாந்தன்
7  அசோகமித்திரனின் சினிமா கட்டுரைகள்
8. கோவை ஞானி கட்டுரைகள் அனைத்தும்
9. கநாசு கட்டுரைகள் அனைத்தும்
10 . மணிக்கொடி காலம் -பி.எஸ்.ராமையா

இவை தவிர எம்.ஏ.நுக்மான் கட்டுரைகள் , வல்லிக்கண்ணன் கட்டுரைகள், கலாநிதி நா.சுப்பிரமணியம் கட்டுரைகள், மயிலை சீனி வேங்கடசாமி கட்டுரைகள், எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள், சாரு நிவேதிதா கட்டுரைகள் , ஆல்பட், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, வேதசகாயகுமார், பாலகுமாரன். பிரபஞ்சன், ஷோபா சக்தி , ஷாஜி, போன்ற பலரது கட்டுரை, விமர்சன நூல்களை விரும்பி வாசித்து ரசித்திருக்கிறேன்.

கவிதைகள்
1 ந.பி்ச்சமூர்த்தி கவிதைகள்
2.பிரமிள் கவிதைகள்
3.பசுவய்யா கவிதைகள்
4. அபி கவிதைகள்
5.நகுலன் கவிதைகள்
6.தேவதேவன் கவிதைகள்
7.வில்வரத்தினம் கவிதைகள்
8.கௌரிஷங்கர் கவிதைகள்
9 கல்யாண்ஜி கவிதைகள்
10 சுகந்தி சுப்பிரமணியம் கவிதைகள்


இவை தவிர பாரதிதாசன் கவிதைகள்,  இலங்கைப் பெண் கவிஞர்கள் , சேரன் கவிதைகள், வ.ஐ.செ.ஜெயபாலன் கவிதைகள், பிரம்மராஜன் கவிதைகள், இன்குலாப் கவிதைகள், விக்ரமாதித்யன் கவிதைகள், ஷங்கர் ராம சுப்பிரமணியம் கவிதைகள், வைரமுத்து. மீரா, மு.மேத்தா, நா.காமராசன்,  கவிதை நூல்கள், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து பாடல்கள் , என பட்டியல் நீளும்

தமிழில் வந்த மொழிபெயர்ப்புகள்

1. நிரபராதிகளின் காலம் -சிக்ப்ரீட் லென்ஸ்
2. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன்
3. புதிய குழந்தை -ஓஷோ ( தமிழாக்கம் செந்தூரம் ஜெகதீஷ்)
4. காதல் தேவதை -மாசோக் ( தமிழாக்கம் -செந்தூரம் ஜெகதீஷ்)
5. செம்மீன் -தகழி சிவசங்கரன் பிள்ளை
6  அபாயம் -ஜோஷ் வாண்டலூ
7. அந்நியன் -ஆல்பர்ட் காம்யூ
8. கரம்சோவ் சகோதரர்கள் -தாஸ்தயவஸ்கி
9. புத்துயிர்ப்பு -லியோ டால்ஸ்டாய்
10. அந்தோன் செக்கவ் கதைகள்

இவை தவிர மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய நாவல்கள், விடியல் பதிப்பகம், கருப்புப்பிரதிகள் ,அலைகள் பதிப்பகம் , காலச்சுவடு. சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்றவை வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவையும் தவறாமல் படிக்கப்பட வேண்டியவை

5 comments:

  1. நண்பர்களே உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை இங்கு எனக்குத் தெரிவியுங்கள்- ஜெகதீஷ்

    ReplyDelete
    Replies
    1. ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசை முழுதும்.

      Delete
  2. கி.ராஜநாராயணன் அவர்களின் "கோபல்ல கிராமம்". தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில ஒன்று.

    பெருமாள்முருகனின் மாதொருபாகன் ஒரு நல்ல நாவல்.

    ReplyDelete
  3. சார் புதுமை எழுத்தை தொடங்கி வைத்த பாரதியை எப்படி சார் விட்டுட்டீங்க….. அவரது கவிதையும்… பாடலாலும்… பாதிக்கப்படாமல்….எப்படி கடந்து சென்று வாசிக்க முடியும் மற்றவர்களை….https://youtu.be/JMd5F7ASGu0

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...