Sunday 10 July 2016

கண்மணி கமலாவுக்கு- புதுமைப்பித்தனின் கடிதங்கள்

கண்மணி கமலாவுக்கு...
புதுமைப்பி்த்தனின் கடிதங்கள்


தன் மனைவிக்கு ஸ்டாம்புகள் வாங்கி அனுப்புகிற - தான் பெற்ற மகளை கொஞ்ச முடியாமல் காணமுடியாமல் தூரத்திலிருந்தே நோய்க்கு அவளை பலிகொடுத்து விடுகிற நடுஇரவில் கனவுகள் கண்டு திடுக்கிட்டு விழித்துக்கொள்கிற - ஆனால் எதிர்காலத்தின் மீது அபாரமான நமபிக்கை கொண்ட ஒரு மகத்தான படைப்பாளியின் அந்தரங்க உலகம் காணக்கிடைக்கிறது. இதுவே இந்நூலின் முக்கியத்துவம். நதிமூலத்தில் இத்தனை சகதியா என திகைப்பக இருக்கிறது.
உயிரின் அடியாழம் வரை தான் பற்றிக் கொண்ட இசங்கள்,கொள்கைகள்,நம்பிக்கைகள் யாவும் ஈவிரக்கமின்றி கண்ணெதிரே சிதைகிற சிதைவுகளை அதன் பரிதாபகரமான தொனியுடன், உள்ளுக்குள் ஒடுக்ப்பட்ட கதறலுடன் இக்கடிதங்களில் வெளிப்படுத்துகிறார் புதுமைப்பிதத்ன. ஒரு மனிதனின் கண்களில் வழியும் கண்ணீரை சுலபமாகக் காண முடிகிறது நம்மால். ஆனால் அக்கண்ணீரின் வேர்வரை இக்கடிதங்கள் நம்மை இழுத்துப்போகின்றன. அங்கே நாம் காண்பது வலியால் திமுறும் புண்கள்,கசியக்கசிய கிடக்கும் காயங்கள்,நம்பிக்கை துரோகங்கள்,ஆசை காட்டி மோசம் செய்யும் இழிவுகள்,ஈனங்கள், மனிதர்களின் சுயநலங்கள் யாவும்.
ஓர் உன்னதப் படைப்பின் பின்னே ஆயிரம் அழிவுகள் உள்ளதன் வேதனையை நாம் நிதானமாகவே உணருகிறோம். ஒன்றை உருவாக்குவதற்கு முன்பு ஒரு கலைஞன் தன்னை எத்தனை முறை உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறான் என்ற குரூரமான படப்பிடிப்பு இக்கடிதங்களில் ஒரு போர்க்கால அழிவைப்போல அப்பட்டமாகக் காடட்டப்படுகிறது. மனசு தவிக்கிறது. இனியும்இ இனியும் இந்த சாபங்களுக்காகத்தான் இலக்கியத்தின் தவம் தொடர்கிறது.
-கோவை ஞானியின் நிகழ் இதழில் பிரசுரமானது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...