Wednesday 1 June 2016

புத்தகக் காட்சி 2016

சென்னை புத்தகக் காட்சிக்கு முதல்நாளிலேயே போய்விடுவேன். இம்முறையும் போனேன். ஆனால் கையில் பணமில்லை.என்னதான் முயன்றாலும் சில ஆயிரங்களைக் கூட கையில் வைத்திருக்க இயலவில்லை. யாரிடமும் கடன் கேட்டு அவமானப்படவும் விருப்பம் இல்லை. பத்திரமாக வைத்திருந்த 500 ரூபாயுடன் நண்பர் ஆர்.கே.ரவியை அழைத்துக் கொண்டு சென்றேன். வாசலில் சாரு நிவேதிதா நியூஸ் 7 தொலைக்காட்சிக்கான கலந்துரையாடலில் அமர்ந்திருந்தார். டிராட்ஸ்கி மருது அரை டவுசருடன் மகிழ்ச்சி பொங்க நின்றிருந்தார். எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மகிழ்ச்சியாக பார்ப்பது அற்புதமான தருணம்.
பாஸ்கர் சக்தி, காலச்சுவடு கண்ணன், மனுஷ்யப்புத்திரன், செல்வி, ஷபி, தமிழினி வசந்தகுமார், அலைகள் சிவம், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் என ஏராளமான நண்பர்களைக் கண்டு நலம் விசாரித்து வந்து விட்டேன். சில வாழ்க்கை வரலாறு நூல்களும்( பஷீர், ஜி.நாகராஜன்) சரஸ்வதி மகால் அரங்கில் பண்டைய தமிழ் இலக்கண நூல்கள் சில 50 சதவீத கழிவில் கிடைத்தன. நவீனஇலக்கிய வாசிப்புக்காக காரல்மார்க்சின் சிறுகதைத் தொகுப்பை சாரு நிவேதிதாவின்  பரிந்துரையை நம்பி வாங்கி விட்டேன். படித்து விட்டு எழுதுகிறேன். இன்னும் சில ரவுண்டுகள் போக வேண்டும். கடவுளே அதற்குள் எனக்கு கடன் தர யாரையாவது அனுப்பி வை......

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...