Friday 10 June 2016

புத்தகக் காட்சி 2

சென்னை புத்தகக் காட்சிக்கு போகவே முடியாத அளவுக்கு கையில் பணமுடை.ஆனால் என்னைப்போன்ற வாசகனுக்கு 365 நாட்களும் புத்தகக்கடைகளிலும் பழையபேப்பர் கடைகளிலும் வீட்டில் உள்ள புத்தகங்களிலும் சஞ்சாரம்தான். ஆகையால் அது ஒரு குறையே அல்ல என்றாலும் பலரை சந்திக்கிற வாய்ப்பு நழுவிப்போகிறது. என்னுடைய புத்தகமும் அச்சாகி வரவில்லை. கிடங்குத்தெரு போட்டு பத்தாண்டுகளாகி விட்டன. அதன்பிறகு சிறகுப்பருவம் சிறுகதைத் தொகுப்பும் செந்தூரம் ஜெகதீஷ் கவிதைகளும் வந்தன. அதன்பிறகு சுமார் ஆறேழு ஆண்டுகள் இடைவெளி. இதுதான் தமிழ்நாட்டில் தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளியின் நிலை.
இந்த ஆண்டு மூன்றுநான்கு முறை புத்தகக்காட்சிக்கு சென்று வந்தேன். அதிகமாக புத்தகங்களை வாங்க முடியாத போதும் லீனா மணிமேகலை, தமிழ்மணவாளன், கௌதம சித்தார்த்தன், சல்மா, காலசுப்பிரமணியம் என நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சிதான் மிச்சம்.
வாங்கிய புத்தகங்களில் எஸ்.பொ.வின் தன்வரலாறு, சினிமா திரைக்கதைகள், அனுபவங்கள், சந்திரபாபு வாழ்க்கை வரலாறு, பிலோ இருதயநாத்தின் நூல்கள், சிற்றிதழ்கள், பெண் படைப்பாளர்களின் கவிதை, சிறுகதைகள், சில பழைய பொக்கிஷங்கள், இலக்கண நூல்கள் என பட்டியலிடலாம்.
புதிதாக எழுதப்பட்ட பல புத்தகங்களில் லஷ்மி மணிவண்ணன், லஷ்மி சரவணகுமார், தமிழ்நதி, முருகவேள். சாருநிவேதிதா. தமிழ்மணவாளன்,இமையம்உ ள்ளிட்டோரின் நூல்கள் மனத்தை கவர்கின்றன. பணம் கிடைக்கும்போது வாங்கிக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு ஜூட் . என்னிடம் முத்துகாமிக்ஸ் பட்டியல் உள்ளது. அதில் என்னிடம் இல்லாத காமிக்ஸ்களையும் வாங்க வேண்டும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், மருத்துவம், போன்ற ஆய்வு நூல்களை வாங்க வேண்டும். டாக்டர் இல்லாத இடத்தில் கிரியா வெளியீடாக மறுபதிப்பு வந்துள்ளது. அதை வாங்கவேண்டும். இப்படி  வாங்காத புத்தகங்களின் பட்டியல் நீளமாக உள்ளது. மிஷ்கினின் திரைக்கதைகள் ,லீனா மணிமேகலையின் திரைக்கதைகள் (சிடியுடன்) போன்ற இன்னும் சில நல்ல புத்தகங்கள் 300 ரூபாய்க்கு மேல் விலை ,வாங்கவே முடியாது போலும்.
இது  ஒருபுறமிருக்க வழக்கமான பழைய புத்தகக்கடைகளில் கண்டெடுத்த பொக்கிஷங்கள் ஏராளம். அதை பட்டியலிட மாட்டேன். அவைதாம்  உண்மையில் புத்தகக் காட்சிகளில் கிடைக்காத புதையல்கள்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...