Saturday 19 March 2016

அரிதினும் அரிது கேள் 26 நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்....

படம் எங்க ஊர் ராசாத்தி
நடிகர்கள் சுதாகர் , ராதிகா
பாடல் - முத்துலிங்கம்> இசை -கங்கை அமரன்
படத்தை இயக்கியவர் N.S.ராஜேந்திரன்.
பாடியவர்கள்- மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா




80 களின் தொடக்கத்தில் புற்றீசல் போல் லோ பட்ஜெட் படங்கள் வெளியாகின. பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களின் தாக்கத்தால் காதல் கதைகளுக்கு கூடுதலான கவனம் கிடைத்தது. சுதாகா் என்ற நடிகர் லோ பட்ஜெட் ஹீரோவாக படங்களில் புக் ஆனார். பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம் மாறாத பூக்கள், எங்க ஊரு ராசாத்தி போன்ற படங்களில் சுதாகர் ஜொலித்தார். பின்னர் தெலுங்குப் படங்களில் காமெடி கலந்த வில்லன் பாத்திரங்களில் நடித்து காணாமல் போனார். ராதிகாவுடன் அவர் ஜோடி சேர்ந்த படம் கிழக்கே போகும் ரயில் ,இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் இந்த ஜோடி இணைந்தது. இதில் ஒன்றுதான் எங்க ஊரு ராசாத்தி. கங்கை அமரன் இளையராஜா கிடைக்காத தயாரிப்பாளர்களுக்காக இசையமைக்கலானார். அவர் இசையமைத்த இந்தப் படத்தில் முத்துலிங்கம் எழுதிய காதல் தோல்வி பாடல் இது. இந்தப் பாடல் எனது பதின் பருவத்தில் இனம் புரியாத துயரத்தையும் ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. காதலர்கள் பிரிந்த பின்னர் விடிவெள்ளியாகவும் வெண்மேகமாகவும் மறுஜென்மத்தில் பிறந்து வந்து இணையும் ஆசை இப்பாடலில் தொனிக்கிறது. இப்போது கேட்டாலும் இனிமையான காதல் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்ற எண்ணம் மாறவே இல்லை.


ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
                  நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை
                  அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...
                  அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
                  அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி

                        (இசை)                          சரணம் - 1

பெண்      :  மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது
                  எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது
                  உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா
                  ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல
                  துடிக்கும் மனச அறிவாயோ

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
                  நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)

பெண்      :  ஆரிராராரோ... ஆரி ராராரோ...
                   ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ

                        (இசை)                          சரணம் - 2

ஆண்      :  எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
                  அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
                  ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல
                  ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
                  காலம் இனிமே வாராதோ

பெண்    :   இன்னோரு ஜென்மம் இருந்தா
                  அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
                  கலந்து அன்போட இருப்போம்
                  அது கண்டாலம் போச்சுதுன்னா
                  என் ராசாவே...
                  நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
                  வானத்தில் பொறந்திருப்பேன்
                  என்னை அடையாளம் கண்டு
                  நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
                  நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை


இதே போன்ற சில பாடல்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர். நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடலில் ஊரை விட்டு வந்தாலும் உன் நினைப்பு மாறலியே என்ற வரிகள் மனத்தில் அழுத்தமாக பதிந்துவிட்டன. கரை கடந்த ஒருத்தியில் ஓடத்திலே தண்ணீரு என்ற எஸ்.ஜானகியின் பாடலும் புதிய தோரணங்கள் படத்தில்  ஓடக்கரை மண்ணெடுத்து உன் உருவம் செஞ்சு வச்சேன் என்ற பாடலும் மறக்கமுடியாத பாடல்களில் இடம் பெற்றுள்ளன. படுத்தா பலநினைவு, பாயெல்லாம் கண்ணீரு எடுத்துச் சொல்ல யார் இருக்காங்க என்ற வரி இன்றும் காதலின் வேதனையை ஒரு முள்ளைப் போல் மனதுக்குள் தைக்கிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...