Sunday 11 January 2015

புத்தகக் கண்காட்சி 2015

சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இந்த ஆண்டு போக வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதாவை விட இப்போதெல்லாம் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, சினேகன், தாமரை, யுகபாரதி போன்றோரைத்தான் பிடிக்கிறது.
இசையிலும் பாடல்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் அடுத்த நாவலுக்கான களத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.
வழக்கம் போல அதிகமாக பணமில்லை. ஆனால் முக்கியப் புத்தகங்களை தவற விட இயலாது. இத்தனை ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்ந்துவிட்டேன். இனியும் மாற வேண்டியதி்ல்லை.
என் பட்ஜெட்டிற்கு உட்பட்டு கிடைத்த நல்ல புத்தகங்களை வாங்கினேன். ஷோபா சக்தியின்  கட்டுரைத் தொகுபபு மற்றும் கதைகளை கருப்பு பிரதிகள் அரங்கில் வாங்கினேன். திருவாரூரை சேர்ந்த தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு கவனம் ஈர்த்தது. வாங்கினேன். நகைச்சுவை நடிகர் பாலையாவின் வாழ்க்கை வரலாறு நிழல் வெளியிட்டிருந்தது. இதே போல தோழமை வெளியிட்டு சேவியர் எழுதிய கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை வாங்கினேன்.சு.வேணுகோபாலின் இரண்டு புத்தகங்களும் இன்னும் சில முக்கிய நூல்களும், இதழ்களும் வாங்கி வந்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குப்பிடித்த முத்து காமிக்ஸ் கிடைத்தது. இரும்புக்கை மாயாவி, சிஐடி லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ ஆகிய ஹூரோக்களின் தலா ஒரு காமிக்ஸ் 50 ரூபாய் விலையில போட்டிருக்கிறார்கள். பழைய காமிக்சில் இருந்த சித்திரங்கள் போல் இதில் இல்லைதான். ஆனாலும் இதன் நாயகர்கள் காமிக்சின் சூப்பர் ஸ்டார்களாச்சே

முத்துகாமிக்ஸ் பதிப்பாளர் எஸ்.விஜயன், இணை இயக்குனர் பொன். சுதா, நிழல் திருநாவுக்கரசு, புதிய தரிசனம் இதழாசிரியர் ஜெபக்குமார், கவிஞர் மனுஷ்யப்புத்திரன் தமிழினி வசந்தகுமார் போன்ற சில நண்பர்களையும் சந்திக்க முடிந்தது.
சாப்பிட வாங்க கான்டீனில் இட்லியும் கல்தோசையும் அதன் துணையாக தந்த சாம்பாரும் அருமையாக இருந்தது

குட்பை புத்தகக் கண்காட்சி 2015

அடுத்த ஆண்டேனும் இன்னும் அதிகமாக பணம் சம்பாதித்து வருகிறேன்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...