Wednesday, 28 January 2015

ராஜ்கபூர் எனும் கலைஞர்

இந்தியாவின் சார்லி சாப்ளின்
நடிகர்இயக்குனர் ராஜ் கபூரின் திரைப்படங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் புனேயில் ராஜ்கபூர் நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் பற்றியவீடியோ செய்தித் தொகுப்பை வெளியிட்டுள்ளதுஇதைப் பார்த்ததும் அந்த மகத்தான திரைப்படக்கலைஞரின் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
ஒருவரின் புன்னகைக்கு முன்னுதாரணமாக இருங்கள்அல்லது
ஒருவரின் கண்ணீரைத் துடைப்பதற்கு துணையாக இருங்கள் என்று அனாரி படத்தில் பாடிய மகத்தானகலைஞர் அவர்ஒருவரின் கண்ணீருக்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடாதீர்கள் என்றுமனிதநேயத்தை அள்ளி இறைத்தவர் ராஜ்கபூர்.
சார்லி சாப்ளின் படைத்த டிராம்ப் கதாபாத்திரங்கள் உலகப் புகழ் பெற்றவைவறுமையிலும்ஏழ்மையிலும் வாழ்க்கையைக் கொண்டாடும் பாத்திரம் தான் டிராம்ப்சாப்ளினே சொன்னது போல நாம் பல நேரங்களில் கண்ணீரை மறைப்பதற்காகவே சிரித்துக் கொண்டிருக்கிறோம்செல்வந்தர்களுக்குவாழ்க்கையில் சுகபோகங்கள் ஏராளம்ருசியான உணவு, சொகுசுப் பயணம் ,உடைநகைகள்மரியாதை,
மதிப்புஆமாம் சாமி போட ஆட்கள்அழகான 
இளம் பெண்கள்ஏர் கண்டிஷன் வாழ்க்கை என நாகரீகசுகபோகங்களுக்கு ஆசைப்படாத மனிதர்கள் யாருமில்லைஆனால் அதற்காக தமதுமனிதாபிமானத்தையும் மனசாட்சியையும் தொலைத்தவர்களை நோக்கித்தான் சார்லி சாப்ளின் தமதுதிரைப்படங்களை ஆயுதமாக்கினார்.
செல்வந்தர்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்க 
ஆயிரமாயிரம் இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றனஏழைவாழ்க்கையைஅனுபவிக்க அவனிடம் இருப்பது அன்பு மட்டும்தான்அன்பினால் செழிக்கும் 
இவ்வையகம்என்று ஏழையை விட யாரறிவார்
தமது நட்புகள் உறவுகளை அந்த அன்பினால்
பிணைத்துக்கொள்பவன்தான் ஏழை டிராம்ப்
அன்பில் தான் அவன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான்அன்பில்தான்அவன் இறைவனை காண்கிறான்அந்த அன்பில்தான் அவன் வாழ்க்கையும் கொண்டாட்டம் ஆகிறது.காதல் அன்பின் அடிப்படையில் எழுகிறதுஆன்மீகமும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
மனிதாபிமானமும் தேச பக்தியும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
சாப்ளினின் டிராம்ப் கதாபாத்திரத்திற்கு இந்திய வடிவம் கொடுத்தவர் ராஜ்கபூர்நடிகர் பிருத்விராஜ்கபூரின் மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தவர் ராஜ்கபூர். 11 வயது முதலே சினிமாவில்நடித்து வந்த அவர் 
ஆவாராஅனாரிஆஹாஆக் போன்ற  வரிசைப்படங்களின் மூலம் புகழ் பெற்றார்.ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மகத்தான இயக்குனர்களுடன் நடிகராக பணியாற்றிய ராஜ்கபூர்ஆர்.கே.பிலிம்ஸ் என்ற தமது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனராகவும் உயர்ந்தார்அவர்இயக்கிய படங்களில் காதலும் மனிதநேயமும் இரு கண்களாக இடம்பெற்றனஅறம் அதன் 
ஆன்மாவாகஇருந்ததுஇதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீ 420 என்ற படம்.
ஸ்ரீ 420 படத்தில் ஏழையான ராஜ்கபூர் பணத்தின் மீது மோகம் கொண்டு ஏழைப் பெண்ணின் காதலைநிராகரித்து பணக்காரப் பெண்ணின் காதலை நாடிச் செல்வார்
பணம்பகட்டு போன்றவற்றால்வழிதவறிய அவர் ஒரு பாடல் காட்சியில் திரும்பிப் பார்க்காதே வாழ்க்கையில் முன்னேறு முன்னேறுஎன்று கலியுக மனிதர்களின் கொள்கையை பிரதிபலித்தார்ஆனால் அவரது ஏழைக்காதலியாக நடித்தநர்கிஸ் நடித்த பாடல் காட்சியொன்றில்முன்னே போகிறவரே சற்று நடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தபடி செல்லுங்கள்...நீங்கள் நிராகரித்து விட்ட மனிதர்களை நினைத்தபடி செல்லுங்கள் என்றுபாடுவாள்இதுதான் ராஜ்கபூர் வகுத்த அறத்தின் பாதைஅந்தப் பாடலில் ஒலித்தது அறத்தின் 
குரல்.
மாமனாராக கூடிய செல்வந்தர் ஏழை எளிய 
மக்களிடம் சீட்டுக் கம்பெனி நடத்தி பல லட்சம் 
ரூபாய்மோசடி செய்த விவகாரத்தை பின்னர் ராஜ்கபூர் உணர்கிறார்செல்வந்தர்களின் செல்வம் பலரது
உழைப்பின் வேர்வைரத்தம்கண்ணீர் கறை படிந்தது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்கிறார்.அப்போது மனம் உடைந்து தனது ஏழைத் தோழர்களை 
நாடி குடிசைப்பகுதிக்கு வருவார் ராஜ்கபூர்.அங்கே 
ராமய்யா வஸ்தாவய்யா என்று அந்த ஏழை மக்கள் 
ஆடிப்பாடி அவரை வரவேற்பார்கள்திருந்திவரும் 
மனிதனும் உண்மையை உணர்ந்து வரும் மனிதனும்தான் மகத்தான மனிதன் என்று புரிதலுடன்ராஜ்கபூர் அந்த ஏழைகளின் உரிமைக்காக போராடுவதாக கிளைமாக்ஸ்  அமைக்கப்பட்டிருக்கும்.ராஜ்கபூருக்கு இத்தகைய இடதுசாரி சிந்தனையை விதைத்தவர்களில் 
முக்கியமானவர் எழுத்தாளர் கே..அப்பாஸ்
அவர்தான் இதுபோன்ற படங்களின் கதை வசனகர்த்தாவாக இருந்தார்.
சங்கம் படம் இன்றைய தமிழ்ப்படத்தின் இருமடங்கு
நீளம் உடையது. 24 ரீல் 2 இடைவேளை எனவெளியான படம் அதுஇந்தப் படத்தில் ஸ்ரீதர் பாணி முக்கோண காதல் 
கதையைப் படம் பிடித்தராஜ்கபூர் மூன்றே கதாபாத்திரங்கள் மூலம் 24 ரீல்களையும் மிகமிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுஷோமேன் ஆப் தி மில்லினியம் என புகழ் பெற்றார்இப்படத்தில் ராஜ்கபூரின் நண்பராகராஜேந்திரகுமாரும் மனைவியாக வைஜயந்தி 
மாலாவும் நடித்திருந்தனர்இந்தப்படத்திலும் 
பாடல்கள் பிரமாதமாக அமைந்துவிட்டனராஜ்கபூரின் இசையமைப்பாளர்கள் சங்கர் ஜெய்கிஷண்பாடலாசிரியர் சைலேந்தர் பாடகர் முகேஷ் ஆகியோர் மாயாஜாலங்களை நிகழ்த்தினார்ராமய்யா வஸ்தாவையாவைமுகமது ரபியை வைத்து பாட வைத்த ராஜ்கபூர் 
இப்படத்திலும் ராஜேந்திர குமாருக்கு முகமது ரபியின்குரலைப் பயன்படுத்தி  மேரா பிரேம் பத்ர என்ற இனிமையான பாடலை வழங்கினார்தமது குரலாகஅவர் எப்போதும் போல முகேஷையே வரித்துக் கொண்டார்முகேஷ் பாடிய போல் ராதா போல்பாடலும் தோஸ்த் தோஸ்த் நா ரஹா பாடலும் அந்தக் காலம் முதல் 
இன்றுவரையிலும் சூப்பர் ஹிட்பாடல்களாக நிலைத்துவிட்டன.
இந்தப் படத்தில் வைஜெயந்தி மாலா நீச்சலுடையில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார்தேன் நிலவிலும்
அவர் நீச்சலுடையில் நடித்த்தாக கூறப்பட்டாலும் 
வண்ணப்படத்தில் இத்தனை மார்பழகை காட்டி அவர்வேறு படங்களில் நடிக்கவில்லை.
நடிகைகளின் மார்பகங்கள் மீது ராஜ்கபூருக்கு தனி வசீகரம் இருக்கத்தான் செய்ததுபழம்பெரும் நர்கிஸ்கூட அவர் படத்தில் ரவிக்கை அணியாமல் வெள்ளைப் புடவையில் நனைந்தபடி ஒருபாடல் காட்சியில்நடித்தார்ஆனால் அவர் முதுகு மட்டுமே ரசிகர்களுக்கு காணக்கிடைத்த்துஆவாராவில்நீச்சலுடையிலும் நர்கிஸ் 
நடித்தார்.
ராஜ்கபூரின் படங்களில் முக்கியமானது மேரா நாம் ஜோக்கர்இதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர் நாட்டியப் பேரொளி என தமிழ்ப்படங்களில் புகழ் பெற்ற நடிகை பத்மினிமுன்பே அவர் ராஜ்கபூரின் ஜிஸ்
தேஷ் மே கங்கா பெஹ்தி படத்தில் ரவிக்கை அணியாமல் கச்சையும் புடவையும் அணிந்து இலைமறைவு 
காய் மறைவாக கவர்ச்சி காட்டியிருந்தார்மேரா நாம் ஜோக்கரில் பத்மினி முற்றும்துறந்துவிட்டார்
குளியல் காட்சியொன்றில் தனது மார்பகங்களை நிர்வாணமாக அளித்தார்மற்றொருகாட்சியில் சட்டை கிழிந்து ஒரு மார்பு முழுவதும் வெளியே தெரியும்படி நடித்தார்எல்லாவற்றுக்கும்மேலாக ஒருபாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி ரவிக்கை அணியாத மார்பழகை தாராளமாககாட்டினார்ஆனால் முலைக்காம்புகள் தெரியாத வகையில் அதில் பேண்ட அய்ட் 
போன்ற ஏதோ ஒருபிளாஸ்தர் ஒட்டியிருந்தனர் 
போலும்மற்றபடி மார்பகத்தின் முழு சைசும் 
தெரிந்தது.
ராஜ்கபூரின் இந்த ரசனை ஜீனத் அமனிடமும் 
மந்தாகினியிடமும் தொடர்ந்தது.சத்தியம் சிவம் சுந்தரம்படத்தில் ஜீனத் அமன் இதேபோல் நிர்வாணமாக 
நடித்தார்ராம்தேரி கங்கா மெய்லியில் மந்தாகினியும்வெள்ளைப் புடவையில் மார்பகத்தை காட்டினார்.
பாலூட்டும் காட்சியிலும் மந்தாகினியின் முழுமார்பகங்களை இந்தி சினிமா ரசிகர்கள் கண்டு களித்தனர்.
மேரா நாம் ஜோக்கர் படத்திலும் நிர்வாணக்காட்சிகள் முத்தக்காட்சிகள் இடம்பெற்றனஆனால்
பின்னால் சென்சாரால் அவை நீக்கப்பட்டனஇருப்பினும் நடிகை சிமி ஒரு குளத்தில் குளித்து ஆடைமாற்றும் காட்சி அவசர அவசரமாக வந்து போனது.
இப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை ராஜ்கபூருடன் 
முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
பாபி படத்தில் ராஜேஷ் கன்னாவின் மனைவியான 
டிம்பிள் கபாடியாவை டூ பீஸ் பிகினியில்அறிமுகம் 
செய்தவரும் ராஜ்கபூர்தான்
ஹென்னா படத்துடன் ராஜ்கபூரின் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்த்துஆயினும் அவரது பிற்காலத்துப் படங்களைக்காட்டிலும் ஆரம்பக்காலத்தில் அவர் இயக்கியநடித்த கருப்புவெள்ளைப்படங்களும் சங்கம்பிரேம் ரோக்பாபி,மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்களும் ராஜ்கபூர் சினிமாவுக்கு அளித்துள்ள 
கொடைகள்.
ராஜ்கபூர் ஜூன் மாதம் 2ம் தேதி தமது 63வது வயதில் காலமானார்அவரது சகோதரர்கள் ஷ்ம்மி கபூர்,சசி கபூர்ரந்தீர் கபூர்,  மகன் ரிஷிகபூர் மருமகள் நீது சிங்ரந்தீர் கபூரின் மனைவி பபிதா ஷம்மி கபூரின்மகன் ராஜீவ் கபூர்பேத்திகள் கரிஷ்மா கபூர்கரீனா கபூர்பேரன் ரன்பீர் கபூர் என இந்தக் கலையுலககுடும்பத்தின் பெயர்ப்
பட்டியல் சற்று பெரிதுதான்.
ராஜ்கபூரின் திரைப்படங்களும் அதன் தேனிசைப் 
பாடல்களும் எந்த ஒரு புதிய ரசிகனுக்கும் பழைய ரசிகன்
பெற்ற அதே பரவசத்தை தரவல்லவைஅதனாலேயே 
ராஜ்கபூரின் இடம் திரையுலகில் ஈடு செய்ய இயலாத
இடமாக இருக்கிறது.
குமுதம்-தீராநதி ஜூன் 2015 இதழில் பிரசுரமானது
K.Jagadish

Wednesday, 14 January 2015

பெருமாள் முருகன் மாதொருபாகன் சர்ச்சை

எழுத்தாளர் பெருமாள் முருகனை ஓரிரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு நண்பரைப் போல் அவரை எப்போதும் கருதியிருக்கிறேன். அவரது ஏறு வெயிலை கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்கி வாசித்த காலம் இன்னும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. நண்பர்களுடன் வடசென்னையில் இருந்த ஓடியன்மணி திரையரங்கு சென்று ஷகிலாவுக்கு முந்தைய காலக்கட்டத்தின் காலைக்காட்சி மலையாளப்படங்களைப் பார்த்த போது, ஓடியன்மணி போன்ற திரையரங்குகளை சித்தரித்த பெருமாள் முருகனின் நிழல் முற்றம் படித்து வியந்திருக்கிறேன். தொடர்ந்து அவர் எழுதிய விமர்சனங்கள், சிறுகதைகளையும் வாசித்து வருகிறேன். அவர் ஏழு நூல்கள் எழுதியது கவனத்தில் தவறிவிட்டது. மாதொரு பாகனும் தவற விட்ட நூல்தான். கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானமும் சேமிப்பும் இல்லாமல் பல நூல்களை வாங்க இயலவில்லை. இலவசமாக நூல்களை கேட்பதில் நான் நிறைய கூச்சப்படுகிறவன். நூலகங்களுக்கு செல்லவும் வாசிக்கவும் செய்தாலும் பல புத்தகங்கள் கை நழுவிப் போய் விட்டன.
அண்மையில் மாதொரு பாகன் நாவலில் திருச்செங்கோட்டில் ஒரு வழக்கத்தை கற்பனையாக அவர் எழுதியது சர்ச்சைக்குள்ளானது. அது முழு கற்பனையும் அல்ல என்ற போதும்.
பெண்கள் கற்பு, தமிழ் உணர்வு, சாதி அரசியல், போன்றவை மின்சாரத்தை விட ஆபத்தானவை. அதில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார் பெருமாள் முருகன் என்று நம்புகிறேன்.ஒரு எழுத்தாளர் இவற்றை கையாளும்போது சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்தான். ஒரு படைப்பால் சமூகத்தில் அமைதி உருவாக வேண்டுமே தவிர வன்முறையோ பதற்றமோ அல்ல.
ஆனால் சமுதாயம் படைப்பாளிக்கும் படைப்புகளுக்கும் ஆற்றும் எதிர்வினை வன்முறைதான். அல்லது என் போன்ற நுட்பமான படைப்பாளிகளுக்கு நேரும் புறக்கணிப்பு. இந்த பாவக்கறை பெருமாள் முருகன் மீதும் இருக்கிறது.அவர் எத்தனை நுட்பமான படைப்பாளிகளின் திறன்களை மதித்தார் என்பது இப்போது பிரச்சினையல்ல
இப்போது பிரச்சினை பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார். இனி நான் பி.முருகன். என்னைை அமைதியாக வாழ விடுங்கள் என்று தமது முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் விடுத்த செய்திதான் தேசிய செய்தித் தொலைக்காட்சிகள் வரை தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
THE AUTHOR IS DEAD என்று போஸ்ட் மாடர்னிச கொள்கையில் ஒரு கருத்தியல் உண்டு. அது தவறாக தமிழ்ச்சூழலால் புரிந்துக் கொள்ளப்பட்டதால் தான் பெருமாள் முருகன் போன்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மறைந்த மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் இன்று என்ற பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில் தமிழில் எழுத்தாளனாக பிறக்கவே கூடாது அது மிகப்பெரிய பாவத்திற்கான தண்டனை எனக் கூறியிருந்தார். இது பெருமாள் முருகன் வரை தொடர்கிறது. இதுவே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அருந்ததி ராய் மாதிரி கொண்டாடியிருப்பார்கள்.
ஆனால் பெருமாள் முருகன் ஒரு விஷயத்தில் சந்தோஷப்படலாம். அவர் இஸ்லாமைப் பற்றி எழுதவில்லை. மாதொருபாகனான சிவபெருமானைப் பற்றியல்லவா எழுதினார். அதனால் பிரச்சினை இத்துடன் விட்டது என ஆசிரியரை அவரே கொன்று விட்டு சாதாரண  பேராசிரியராக மற்ற நூற்றுக்கணக்கான மந்தைகளில் ஒருவராக வாழ்வது சுலபம்- ஈகோவை வி்டடுவிட்டால். இஸ்லாம் பற்றி எழுதியிருந்தால் சல்மான் ருஷ்டியைப் போலவோ, தஸ்லீமா நஸ் ரீனைப் போலவோ பத் துவா விதிக்கப்பட்டு மரண தண்டனைக்கு பயந்து நாடு நாடாக தப்பியோடிக் கொண்டிருக்க நேரிடும். சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலை எண்ணிப் பாருங்கள்.

பெருமாள் முருகனை நண்பர் என்றழைத்தேன். நட்புடன் ஒருவார்த்தை. தன்முனைப்பு, அகங்காரம், தான் ஒரு பெரிய படைப்பாளி என்ற பட்டங்களை இழக்க வேதனைப்படாதீர்கள். மகிழ்ச்சியுடன் LET GO சில ஆண்டுகள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழுங்கள். பின்னர் விரும்பினால் இன்னொரு புத்தகம் எழுதுங்கள்.வேறு பெயரிலும் எழுதலாம். அதற்கு சாகித்ய அகடமியும் கிடைக்கலாம். நாடே பாராட்டலாம்..வாழ்த்துகள்

ஒரேயொரு வேண்டுகோள்- தற்கொலை போன்ற பலவீனமான முடிவுக்குத் தள்ளப்படாமல் மனதின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பல தடவை மனநலம் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ரயில் தண்டவாளங்களில் நின்று பெற்ற அனுபவ ஞானத்தையே உபதேசமாக அளிக்கிறேன்.












Sunday, 11 January 2015

புத்தகக் கண்காட்சி 2015

சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இந்த ஆண்டு போக வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதாவை விட இப்போதெல்லாம் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, சினேகன், தாமரை, யுகபாரதி போன்றோரைத்தான் பிடிக்கிறது.
இசையிலும் பாடல்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் அடுத்த நாவலுக்கான களத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.
வழக்கம் போல அதிகமாக பணமில்லை. ஆனால் முக்கியப் புத்தகங்களை தவற விட இயலாது. இத்தனை ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்ந்துவிட்டேன். இனியும் மாற வேண்டியதி்ல்லை.
என் பட்ஜெட்டிற்கு உட்பட்டு கிடைத்த நல்ல புத்தகங்களை வாங்கினேன். ஷோபா சக்தியின்  கட்டுரைத் தொகுபபு மற்றும் கதைகளை கருப்பு பிரதிகள் அரங்கில் வாங்கினேன். திருவாரூரை சேர்ந்த தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு கவனம் ஈர்த்தது. வாங்கினேன். நகைச்சுவை நடிகர் பாலையாவின் வாழ்க்கை வரலாறு நிழல் வெளியிட்டிருந்தது. இதே போல தோழமை வெளியிட்டு சேவியர் எழுதிய கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை வாங்கினேன்.சு.வேணுகோபாலின் இரண்டு புத்தகங்களும் இன்னும் சில முக்கிய நூல்களும், இதழ்களும் வாங்கி வந்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குப்பிடித்த முத்து காமிக்ஸ் கிடைத்தது. இரும்புக்கை மாயாவி, சிஐடி லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ ஆகிய ஹூரோக்களின் தலா ஒரு காமிக்ஸ் 50 ரூபாய் விலையில போட்டிருக்கிறார்கள். பழைய காமிக்சில் இருந்த சித்திரங்கள் போல் இதில் இல்லைதான். ஆனாலும் இதன் நாயகர்கள் காமிக்சின் சூப்பர் ஸ்டார்களாச்சே

முத்துகாமிக்ஸ் பதிப்பாளர் எஸ்.விஜயன், இணை இயக்குனர் பொன். சுதா, நிழல் திருநாவுக்கரசு, புதிய தரிசனம் இதழாசிரியர் ஜெபக்குமார், கவிஞர் மனுஷ்யப்புத்திரன் தமிழினி வசந்தகுமார் போன்ற சில நண்பர்களையும் சந்திக்க முடிந்தது.
சாப்பிட வாங்க கான்டீனில் இட்லியும் கல்தோசையும் அதன் துணையாக தந்த சாம்பாரும் அருமையாக இருந்தது

குட்பை புத்தகக் கண்காட்சி 2015

அடுத்த ஆண்டேனும் இன்னும் அதிகமாக பணம் சம்பாதித்து வருகிறேன்.


Friday, 9 January 2015

அறிவிப்பு

கடந்த 6 மாதங்களாக மனச்சோர்வு, பிரச்சினைகள் காரணமாக முழுமைப்படுத்த முடியாத இந்த இணைய வலைப்பக்கத்தை இனி கூடியமட்டும் அதிகமான கவனம் கொண்டு புத்துணர்வு அளிக்க திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் தொடர்பான எனது மற்றொரு தளம் முடக்கப்பட்டதால் இனி திரைப்படக் கட்டுரைகளையும் இங்கே வாசிக்கலாம்
அன்புடன்
செந்தூரம் ஜெகதீஷ்

Wednesday, 28 May 2014

கோச்சடையான்

அபிராமி 7 ஸ்டார் திரையரங்கில் கோச்சடையான் படம் பார்த்தேன்.முதலில் சில நிமிடங்கள் பிரமிக்க வைத்தது 3 டி தொழில்நுட்பம். ஆனால் படம் பெரும் ஏமாற்றம். ரஜினிமாதிரி ஒரு பொம்மை வந்து ஆடுகிறது, பன்ச் டயலாக் பேசுகிறது, சண்டை போடுகிறது.நாகேஷ், தீபிகா படுகோனே, ஜாக்கி சராப், நாசர் என நிறைய பொம்மைகள் வந்து வந்து போகின்றன. சோபனாவின் பொம்மை லோ -ஹிப் புடவை மட்டும் நிஜம் போல கிளர்ச்சியைத் தருகிறது.சினிமாவே பொம்மை எனும் போது இது பொம்மையின் பொம்மை என்று சொல்லத் தோன்றுகிறது. நான் ஒன்றும் தொழில்நுட்ப மாயங்களுக்கு எதிரியல்ல. இந்த தொழில்நுட்பத்தில் மகாபாரதமோ ராமாயணமோ எடுக்கலாம். அனுமானையும் கண்ணனையும் அப்படி பிரம்மாண்ட ரூபத்தில் பார்க்க ஆசைதான். ஆனால் ரஜினி.....
எஜமான் படத்தில் நிலவே முகம் காட்டு என மீனாவை ஒரு தாய் போல மடியில் தூங்க வைத்து பாடுவாரே அந்த உணர்வு மிஸ்ஸிங்.அதுவல்லவா எங்கள் ரஜினிகாந்த்.
ஹீரோவை சூப்பர் ஹீரோவாக காட்டியே அழிச்சுட்டாங்கப்பா

அந்த ரஜினியைத்தான் நானும் ரசிகர்களும் காண விரும்புகிறோம். வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான், சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் உழைப்பும் பல்லாயிரம் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையும் வீணாகிப் போச்சே என்ற வருத்தத்துடன் தான் படத்தை விட்டு வெளியே வந்தேன்.

Thursday, 3 April 2014

படித்ததும் பார்த்ததும்

பல புத்தகங்கள் படிக்கப்படாமல் உள்ளன. ஜனவரி தொடங்கி இன்று வரை 17 புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். 36 படங்களைப் பார்த்திருக்கிறேன். படிக்க வேண்டியவை 500 பார்க்க வேண்டிய படங்கள் ஆயிரக்கணக்கில். கண்கள், பற்கள், உடல்திறன், ஊக்கம் யாவும் வயதின் காரணமாக தேய்ந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உடலைப் பற்றியே அதிகம் கவலைப்பட நேரிடும். படிப்பும் படம் பார்க்கும் ஆர்வமும் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க எழுத வேண்டிய பக்கங்கள் பதிப்பிக்க வேண்டிய புத்தகங்கள் என மனதை அழுத்தும் சுமைகள்....

அதுமட்டுமின்றி அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள். கடன்கள், பற்றாக்குறைகள்
----------------------------------

சமீபத்தில் மீண்டும் படித்த இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள் கருணையில் ஏசுவையும் மார்க்சையும் ஒரு நேர்க்கோட்டில் இணைக்க முயன்ற எழுத்து. ஆனால் சலிப்பூட்டும் நடை, கம்யூனிச வியாக்கியானங்கள், போலந்து வாழ்க்கை முறைகள் என அந்நியமாக நிற்கிறது. இ.பா.வின் இதர புத்தகங்களை பார்க்கலாம்.

------------------------

கலீல் கிப்ரான் தனது ரகசிய ஸ்நேகிதி மேரி ஹட்சனுக்கு எழுதிய ஏராளமான கடிதங்களை அவர் பாதுகாத்து வைத்திருந்தார். அதே போல மேரி எழுதிய கடிதங்களை கிப்ரான் ஒரு பெட்டி நிறைய சேர்த்து வைத்திருந்தார். கிப்ரான் மரணத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அந்த கடிதங்களை மேரியிடம் ஒப்படைத்தார் கிப்ரானின் உதவியாளர். தன்னைப் போல கிப்ரானும் கடிதங்களைப் பாதுகாத்ததை கண்டு மெய்சிலிர்த்த மேரி இருவரின் கடிதங்களையும் அச்சிட தந்து விட்டார். அப்படி அச்சான ஒரு புத்தகம்தான்
BELOVED PROPHET என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் கிப்ரானின் வழக்கமான தெறிப்புகள் ஏராளம்....ஒரே நேரத்தில் ஒருவர் மலைச்சிகரத்தையும் அதன் பள்ளத்தாக்கையும் பார்க்க முடியுமா என்றொரு வரி....எனது உடலுறவின் ஆற்றலில் ஒரு பகுதியைத்தான் என் எழுத்தில் தருகிறேன் என்று கூறுகிறார்.தனது ஓவியங்களைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறார் கிப்ரான். அதுதான் அவருக்கு வருமானம் அளித்தது போலும். எழுத்தைப் பற்றி மிகச்சிறிய குறிப்புகள் உள்ளன.
மரணம் பற்றி சிந்திக்கிறார் . மரணித்துப் போனவர்கள் எங்கே போனார்கள்...நிச்சயமாக அவர்கள் எங்கேயோ இருந்துக் கொண்டுதான் இருப்பார்கள்.நம்மைப் போல அவர்கள் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்க முடியுமா என கேட்கிறார்.நான் மறைந்த பிறகு எங்கே செல்வேன் என்றும் கேட்கிறார்.....
எங்கே போனாய் கிப்ரான்...?

எனக்கும் எழுந்துள்ளது இக்கேள்வி பல முறை...எங்கே போவேன்....எங்கே போனார்கள் எல்லோரும்......

இதைப்பற்றி நகுலன் எழுதியிருக்கிறார் நினைவுப்பாதையில். ஜானே வாலே லவுட்கே ஆஜா என்ற முகேஷ் பாடிய பாந்தினி படப்பாடலை வைத்து ஜானே வாலே என்ற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படு்த்தினார் நகுலன்.

போகிறவர்கள் எங்கே போனார்கள்...என்ன ஆனார்கள்.....

கயிற்றரவு கதையில் புதுமைப்பித்தன் கேட்ட அதே கேள்விதான்.
----------------------------
பார்த்த திரைப்படங்களில் கிம் குக் டுக்கின் தி ஐசல் என ஒரு படம், ஜான் தாரா என்ற காமக்களியாட்ட படம் போன்ற படங்கள் பட்டியலிட்டு பேசலாம் என்றாலும் மனதுக்குள் நிற்பதென்னவோ பழைய ஆயிரத்தில் ஒருவன்தான். எம்ஜிஆரின் வாள்வீச்சு, ஜெயலலிதாவின் நடனம், பந்தலுவின் சலிப்பு தராத இயக்கம், நாகேஷின் மயக்கும் நகைச்சுவை, கண்ணதாசன் வாலியின் பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் இசை, ஆர்.கே.சண்முகத்தின் அற்புதமான வசனங்கள் என ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்புகள் ஏராளம்.
ஒரு வசனம்- உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா நிரந்தரமாக நீடிப்பதற்கு....இந்த வசனம் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் சரியான அடி.. ஜெயலலிதாவின் அகங்கார ஆட்சிக்கும் சேர்த்துதான்











Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...