இந்திய சினிமா- ஏ தில் ஹை முஷ்கில்

இயக்குனர் கரண் ஜோகரின் ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் வெளிவரும் முன்பே கடும் சர்ச்சைக்கு ஆளானது. காரணம் ஐஸ்வர்யா ராய்-ரன்பீர் கபூரின் முத்தக்காட்சி. ஆனால் அமிதாப் குடும்பத்தினர் கடுப்பானதால் அந்த முத்தக்காட்சி நீக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. படத்தைப் பார்க்க மூன்றாவது வாரம் தொடக்கத்தில்தான் நேரம் கிடைத்தது. சத்தியம் திரையரங்கில் பகல் காட்சிக்குப் போனேன். படம் அருமையாக இருக்கிறது என்று கூற முடியாவிட்டாலும் போரடிக்காமல் நகர்கிறது. மெலிதான நகைச்சுவை, இரட்டை அர்த்த செக்ஸ் நெடி ஆங்காங்கே முத்தங்கள், அரைகுரை ஆடைகள் ,கிளிவேஜ்கள், தொடைகள், இசை பாடல்கள் லண்டன், வியன்னா ,லக்னோ என கலர்புல்லாக போகிறது. ஐஸ்வர்யா ராய் ஒருஐஸ்கிரீம் தேவை. உணவக காட்சி ஒன்றில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் இந்த தேவதையிடம் யார்தான் காதல் வசப்படாமல் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ( படத்தின் மற்றொரு காட்சியில் அதே வசனத்தை ரன்பீருக்காக ஐஸ் கூறுகிறார் இந்த அழகான வாலிபனிடம் எப்படி நீ காதல் வசப்படாமல் இருந்தாய் என்று அனுஷ்காவிடம் ஐஸ்வர்யா கேட்கும்போது விசில் பறக்கிறது. விசில் அடித்தவர்கள் ரன்பீரின் ரசிகைகள்.
படத்தில் இருக்கும் காதல் செயற்கையாக இருக்கிறது. ஆனால் எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த அழகான இளம் பெண் ஒருத்தி தனது தோழிக்கும் தெரியாமல் ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். அதில் ஒன்று என் கண்ணில் பட்டு விட்டது.
  I WILL LOVE TO DIE IN YOUR LAP
என்ற அந்த வாசகம் படம் முடிந்து நீண்ட நேரம் என்னை அலைக்கழித்தது. அந்த காதலனுக்காக பொறாமைப்பட்டேன்.
படத்தின் இறுதியில் அனுஷ்காவும் இப்படித்தான் ரன்பீரின் மடியில் உயிர் துறப்பார். அந்த காட்சியை விட இடைவேளையில் அருகில் இருந்த பெண் அனுப்பிய குறுஞ்செய்திதான் மகத்தான காதலாக பட்டது.


Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்